சேலம் அருகே மின்னல் தாக்கி தந்தை கண் எதிரே பள்ளி மாணவன் உயிரிழப்பு

சேலம் அருகே மின்னல் தாக்கி தந்தை கண் எதிரே பள்ளி மாணவன் உயிரிழப்பு
X

பைல் படம்.

Salem News Today: சேலம் அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Salem News Today: சேலம் மாவட்ட், கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கோடி காட்டை சேர்ந்தவர் காமராஜ் (45), கைத்தறி நெசவு தொழிலாளியான இவருக்கு மனைவி சாந்தி (41), ஹேமலதா என்ற மகளும், கோகுல் குமரன் (12) என்ற மகனும் உள்ளனர்.

இவர்களில் கோகுல் குமரன் கொண்டலாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி தேர்வுகள் முடிந்து தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் வீட்டின் மொட்டை மாடியில் படித்துக்கொண்டிருந்தான். அவருடைய தந்தை காமராஜ் அருகிலேயே உட்கார்ந்துகொ்டிருந்தார்.

அப்போது கருமேகக் கூட்டம் திரண்டதால், சிறுவன் மொட்டை மாடியில் படிக்கட்டின் அருகே நின்று கொண்டிருந்தான். திடீரென சிறுவன் மீது மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தான்.

அதே நேரத்தில் மொட்டை மாடியில் மற்றொரு பகுதியில் நின்றுகொண்டிருந்த அவனுடைய தந்தையும் இந்த மின்னல் தாக்கத்தால் சற்று அதிர்ந்து போனாலும், தனது கண் எதிரே மகன் மின்னல் தாக்கி கரிக்கட்டையாக மாறியதை கண்டு கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அங்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்களும் கரிக்கட்டையாக கிடந்த மாணவனின் உடலை பார்த்து சோகத்தில் ஆழ்ந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கொண்டலாம்பட்டி போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவன் தந்தை கண் எதிரே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story