சேலம் மார்க்கெட்டில் குவிந்த தேங்காய் வரத்து 50 சதவீதம் அதிகரிப்பு

சேலம் மார்க்கெட்டில் குவிந்த தேங்காய் வரத்து 50 சதவீதம் அதிகரிப்பு
X

பைல் படம்.

Salem News Today - சேலம் மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து 50 சதவீதம் அதிகரித்து கிலோ ரூ.32க்கு விற்பனையானது.

Salem News Today - சேலம் மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து 50 சதவீதம் அதிகரித்து கிலோ ரூ.32க்கு விற்பனையானது.

சேலம் மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட தேங்காய் வரத்து 50 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழை பெய்து வந்தது. இதனால் தேங்காய் அமோக விளைச்சலைக் கொடுத்துள்ளது.

தமிழகத்தின் கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, சேலம், உடுமலைப்பேட்டை, பெருந்துறை, கன்னியாகுமரி மற்றும் தஞ்சை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன. அதேபோல் கேரளாவிலும் தென்னை மரங்கள் அதிகளவில் காணப்படுகிறது.

இங்கு பறிக்கப்படும் தேங்காய்களை இந்தியா முழுவதும் விவசாயிகள் அனுப்பி வைக்கின்றனர். கடந்த ஆண்டில் ஆங்காங்கே கனமழை பெய்ததால் ,அனைத்து பகுதிகளிலும் தென்னை மரங்களில் தேங்காய் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பின் காரணமாக மார்க்கெட்டில் தேங்காய் விலைகளும் சரியத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சேலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ தேங்காய் ரூ.32 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து சேலம் தேங்காய் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கையில், சேலம் மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 300 முதல் 400 டன் தேங்காய்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. இதனை சில்லரை வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். கடந்த ஆண்டு பரவலாக பெய்த மழையால், தேங்காய் அமோக விளைச்சலை தந்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து கூடியுள்ளது.

கடந்த மாதம் ஒரு டன் தேங்காய் ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது டன்னுக்கு ரூ.4 ஆயிரம் சரிந்து ரூ.26 ஆயிரம் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லரையில் சிறிய அளவுள்ள தேங்காய் ரூ.8 என்றும், நடுத்தர அளவு ரூ.10 முதல் ரூ.15 என்றும், பெரிய தேங்காய் ரூ.18 முதல் ரூ.20 என்றும் விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் தேங்காய் வரத்து அதிகரிக்கும். அப்போது மேலும் விலை சரிய வாய்ப்புள்ளது என்றனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil