ஆதிதிராவிடர், பழங்குடியினர் நிலம் வாங்க தாட்கோ மானியமாக ரூ.5 லட்சம்
பைல் படம்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் நிலம் வாங்க தாட்கோ மானியமாக ரூ.5 லட்சம் பெற்று பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 200 நிலமற்ற விவசாய தொழிலாளர் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் ரூ.5.00 இலட்சம் மானியத்துடன் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
அதன்படி, நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் நிலம் வாங்க மொத்தம் 8 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திற்கு மொத்த இலக்கு 8-இல், 7 ஆதிதிராவிடர்களுக்கும் மற்றும் 1 பழங்குடியினருக்கும் தலா ரூ.5.00 இலட்சம் வீதம் ரூ.40.00 இலட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பில் மொத்த இலக்கு 8-இல் 7ஆதிதிராவிடர்களுக்கும் மற்றும் 1 பழங்குடியினருக்கும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு நிலம் வாங்க தலா ரூ.5.00 இலட்சம் மானியம் வழங்கப்படும்.
குடும்ப ஆண்டு வருமானம் மூன்று இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மகளிர் அல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகன்களுக்கு வழங்கப்படும். விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) திட்டத்தில் ஏற்கனவே மானியம் பெற்றிருக்க கூடாது. வாங்க உத்தேசித்துள்ள நிலத்தை விண்ணப்பதாரரே தெரிவு செய்ய வேண்டும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் அல்லாத பிற இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். நிலத்தின் சந்தை மதிப்பீட்டின் படி திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் வரை தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மானியம் விடுவிக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள ஆதிதிராவிடர் பயனாளிகள் https://application.tahdco.com/ என்ற இணையதள முகனரியிலும் மற்றும் பழங்குடியினர் பயனாளிகள் https://fast.tahdco.com/ என்ற இணையதள முகனரியிலும் பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu