இளைஞர் கொலை சம்பவத்தில் 4 பேர் கைது

இளைஞர் கொலை சம்பவத்தில் 4 பேர் கைது
X

பைல் படம்.

Salem News Today: சேலத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Salem News Today: சேலம் சன்னியாசிகுண்டு மூவேந்தர் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 28). இவர் உலக்கை தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயக்குமார் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து ஓந்தாப்பிள்ளை காடு பகுதியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது அவர்களின் அருகே சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த தினேஷ் (23), வெங்கடேஷ் (25), அஜித் (25), அசோக்குமார் (25) ஆகியோரும் மது அருந்தி உள்ளனர். இந்தநிலையில் தினேஷ், ஜெயக்குமாரிடம் ரூ. 20 வாங்கி உள்ளார். அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் திடீரென தினேஷ் தரப்பினருக்கும், ஜெயக்குமார் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தினேஷ் அங்கிருந்த விறகு கட்டையை எடுத்து ஜெயக்குமாரை கடுமையாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்தநிலையில் இந்த கொலை தொடர்பாக தினேஷ் மற்றும் அவரது நண்பர்களான வெங்கடேஷ், அஜித், அசோக்குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபசார வழக்கில் பெண் புரோக்கர் கைது

சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் தங்கும் விடுதி ஒன்றில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதியில் திடீரென சோதனை செய்தனர். அப்போது, அங்கு 2 இளம்பெண்களை வைத்து விபசார தொழிலில் ஈடுபட்டு வந்த களரம்பட்டியை சேர்ந்த புரோக்கர் புவனேஸ்வரி (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது கட்டுப்பாட்டில் இருந்த 2 இளம்பெண்களையும் போலீசார் பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். விபசார தொழிலில் புரோக்கர்களாக செயல்பட்டதாக பாலா, விஜயன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்