அரிசி ஆலை ஓனர் வீட்டில் 3 கிலோ வெள்ளி திருட்டு..!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலையை சேர்ந்தவர் தனபால் 50. அதே பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ளார். இவரது மனைவி சாந்தி நாமக்கல்லில் 'நீட்' தேர்வுக்கு மகள் படிப்பதால் அவருடன் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தனபால் அருகே உள்ள அரிசி ஆலைக்கு சென்றார்.
பூட்டு உடைக்கப்பட்டது
நேற்று காலை 8:00 மணிக்கு திரும்பி வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ அருகே இருந்த சாவியை மர்ம நபர்கள் எடுத்து, அதன் அறைகளில் இருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பில் 3 கிலோ வெள்ளி பொருட்கள் 10,000 ரூபாயை திருடிச்சென்றது தெரிந்தது.
போலீசார் விசாரணை
அவர் தகவல்படி கெங்கவல்லி போலீசார் ஆய்வு செய்தனர். போலீசார் கூறுகையில் வெளிப்புற கதவை கடப்பாரையால் உடைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடுகிறோம் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu