சேலத்தில் 300 கைதிகள் எழுத்தறிவு தேர்வு எழுதினர்

சேலத்தில் 300 கைதிகள் எழுத்தறிவு தேர்வு எழுதினர்
X
சேலத்தில் 300 கைதிகளுக்கு கல்வி சாதனை, தமிழக சிறப்பு திட்டத்தின் மூலம் தேர்வு

சேலம் மத்திய சிறையில் எழுத, படிக்க தெரியாத 300 கைதிகளுக்கு தமிழக சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் கீழ் கடந்த ஆறு மாதங்களாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் கைதிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு, அடிப்படை எழுத்தறிவுப் பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று இப்பயிற்சியின் முடிவில் கைதிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில வயது வந்தோர் கல்வித் திட்ட இயக்குநர் நாகராஜ் முருகன் மற்றும் முதன்மை கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மெய்யழகன் ஆகியோர் கலந்துகொண்டு தேர்வை தொடங்கி வைத்தனர். அதன்பின் அனைத்து கைதிகளும் தேர்வை எழுதினர்.

Tags

Next Story