/* */

சேலம் மாவட்டத்தில் 3 நாட்கள் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள்

சேலம் மாவட்டத்தில் 3 நாட்கள் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் 3 நாட்கள் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள்
X

பைல் படம்.

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சேலம் மாவட்டத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-2024ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களையும், சேலம் மாவட்டத்தில் மூன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் 05.08.2023,16.09.2023, 18.10.2023 ஆகிய தினங்களில் முறையே சேலம், எடப்பாடி, ஆத்தூர் ஆகிய இடங்களில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் நிகழ்வாக, வருகின்ற 05.08.2023 அன்று சேலம் சோனா கல்விக் குழும வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த பல முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வுசெய்யவுள்ளனர்.

சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதியினை உடையவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இவ்வேலைவாய்ப்பு இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

பணிக்காலியிடங்களுக்கு நபர்களைத் தேர்வு செய்யவுள்ள தொழில் நிறுவனங்களும், சேலம் மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 29 July 2023 4:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  2. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  3. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  4. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  5. குமாரபாளையம்
    நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு..!
  6. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  7. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  8. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  9. ஈரோடு
    ஈரோட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்:...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே சாலை பணிகளை இரவு நேரங்களில் மேற்கொள்ள பயணிகள்...