தேவூரில் தன்னார்வலர்களுக்கன 2ம் கட்ட பயிற்சி, கண்காட்சி முகாம்

தேவூரில் தன்னார்வலர்களுக்கன 2ம் கட்ட பயிற்சி, கண்காட்சி முகாம்
X

நாணயங்கள் கண்காட்சி.

தேவூரில் தன்னார்வலர்களுக்கன 2ம் கட்ட பயிற்சி, கண்காட்சி முகாம் நடைபெற்றது.

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம், சங்ககிரி கல்வி மாவட்டத்தின் சார்பில் சங்ககிரியை அடுத்துள்ள தேவூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தேவூர், அரசிராமணி பகுதியில் உள்ள தன்னார்வலர்களுக்கன இரண்டாம் கட்ட பயிற்சி மற்றும் கண்காட்சி முகாம் நடைபெற்றது.

இம்முகாமினை தேவூர் பள்ளித் தலைமையாசிரியர் அய்யாசாமி தொடங்கிவைத்து, தன்னார்வலர்கள் மாணவ மாணவிகளுக்கு எவ்வாறு கற்றல் கற்பித்தல் முறையில் பாடம் கற்பிக்கின்றனர் என்று கேட்டறிந்தார்.

அப்போது தன்னார்வலர் பெண் ஒருவர், கடந்த 1961ம் ஆண்டு முதல் 2013ம் வருடம் வரை உள்ள ஒரு பைசா முதல் 1 ரூபாய் வரை நாணயங்களை சேகரித்து காட்சிப்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது.

இதில் சங்ககிரி வட்டார வள மைய மேற்பார்வையாளர் சாந்தி, வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் ரத்தினவேல், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆனந்தன், மூர்த்தி, சிவக்குமார், பாலசுப்பிரமணியம், சங்ககிரி வட்டார ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பாளர் இரா.முருகன் உட்பட இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் பள்ளி மாணவ-மாணவிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!