/* */

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை கண்காணிக்க 250 பேர் கொண்ட பறக்கும் படை

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை கண்காணிக்க 250 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை கண்காணிக்க 250 பேர் கொண்ட பறக்கும் படை
X

பைல் படம்.

2022-2023 நடப்புக் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (06.04.2023) தொடங்கியுள்ளதையொட்டி, தேர்வுகள் நடைபெறும் மையங்களில் ஒன்றான சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

2022-2023-ஆம் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 06.04.2023 முதல் 20.04.2023 முடிய உள்ள நாட்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 189 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 179 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 10 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மையங்களில் 22,599 மாணவர்கள், 21965 மாணவிகள் என மொத்தம் 44,564 தேர்வர்கள் பத்தாம் பொதுத் தேர்வினை எழுதுகின்றனர்.

இத்தேர்வுகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் வகையில் 28 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 37 வழித்தட அலுவலர்கள், 189 முதன்மை கண்காணிப்பாளர்கள், 189 துறை அலுவலர்கள், 3430 அறை கண்காணிப்பாளர்கள், 210 ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் தேர்வுமையங்களை கண்காணிக்கும் பொருட்டு முதுகளை, பட்டதாரி ஆசிரியர்கள் நிலையில் 250 ஆசிரியர்கள் பறக்கும் படைக்குழுக்களாகவும் என பல்வேறு நிலைகளிலும் தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், முன்னதாக பொதுத்தேர்வு நடத்தப்படுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தான் சேகரிப்பு மையங்கள், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்கள் மற்றும் தேர்வு மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் வசதியினை ஏற்பாடு செய்திடவும், தேர்வர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்திடவும், தடையில்லா மின்சார வசதிகள் வழங்கிடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, மாணவர்கள் பொதுத்தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். மனதை இயல்பான நிலையில் வைத்து, வினாக்களுக்கு ஏற்ற விடைகளை தெளிவாகவும், பொறுமையாகவும் எழுத வேண்டும்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவியர்கள் சிறப்பான முறையில் தேர்வுகளை எழுதி வெற்றிபெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் இரா.முருகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 8 April 2023 5:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  4. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  5. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  6. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  8. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  9. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  10. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?