சேலத்தில் ஒரே நாளில் 2 போலி டாக்டர் கைது

சேலத்தில் ஒரே நாளில் 2 போலி டாக்டர் கைது
X

பைல் படம்.

சேலம் அன்னதானப்பட்டியில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஹெலன் குமார் நேற்று மாலை மருத்துவ குழுவினருடன், சேலம் சீலநாயக்கன்பட்டி ராஜீவ் நகரில் செயல்பட்டு வந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது அங்கு தபாரங் ஆலம் (வயது 52) என்பவர் தன்னை டாக்டர் என கூறிக்கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததாக தெரிகிறது.

அவர் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு படித்து விட்டு, மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு மருத்துவ குழுவினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த போலீசார் போலி டாக்டர் தபாரங் ஆலனை கைது செய்தனர். மேலும் மருத்துவமனையில் இருந்த மாத்திரைகள் மற்றும் ஊசிகளையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மற்றொரு போலி டாக்டர், அன்னதானப்பட்டி திருச்சி மெயின் ரோட்டில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த ஜெயராமன் (வயது 74) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவரது ஆஸ்பத்திரியில் இருந்தும் மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் போலி மருத்துவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்