சேலத்தில் 28ம் தேதி மு.க.ஸ்டாலின், ராகுல் ஒரே மேடையில் பிரசாரம்

சேலத்தில் 28ம் தேதி மு.க.ஸ்டாலின், ராகுல் ஒரே மேடையில் பிரசாரம்
X

ராகுல்காந்தி- மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சேலத்தில் 28-ம் தேதி நடைபெறுகிறது.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து சேலம், சீலன்நாயக்கன்பட்டியில் ஞாயிற்றுகிழமை (28-ம் தேதி) மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கறார். இதில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

இதில் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, திராவிட கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொங்கு மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன், ஆதி தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், மக்கள் விடுதலை கட்சி நிறுவன தலைவர் முருகவேல் ராஜன் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர். பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.




Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்