திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு-எல்.முருகன்

திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு-எல்.முருகன்
X

திமுக-காங்கிரஸ் கூட்டணி விரைவில் உடைவதற்கு வாய்ப்பு உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறினார்.

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசினார்.அப்போது அவர் கூறியது,தேசத்தின் வளர்ச்சி, தமிழகத்தின் வளர்ச்சியை மனதில் கொண்டு மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிதிநிலை பட்ஜெட்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு புதிய தொழிற்சாலைகள் வர வாய்ப்பு உள்ளது. இதனால் நிறைய வேலை வாய்ப்பு உருவாகும். தொழில்துறையில் தமிழகம் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் வாய்ப்பு இதன் மூலம் உருவாகி உள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் நிதிநிலை அறிக்கையை அவர் வரவேற்கவில்லை. அவர் சொல்வதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. தமிழகத்திற்கு இவ்வளவு திட்டங்கள் வந்துள்ளதை வரவேற்க மனம் இல்லை என்பதால் அவர் இவ்வாறு கூறுகிறார்.தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணி இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அந்தக் கூட்டணி விரைவில் உடைவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!