சபரிமலை சீசன்: சென்னை - நெல்லை இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்

சபரிமலை சீசன்: சென்னை - நெல்லை இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்
X

கோப்புப்படம் 

சபரிமலை சீசன் தொடங்கியதை முன்னிட்டு சென்னை - நெல்லை இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

சபரிமலை சீசன் தொடங்கியதை முன்னிட்டு சென்னை - நெல்லை இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை - நெல்லை இடையே நவ.16 ஆம் தேதி முதல் டிச.28 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மட்டும் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15க்கு நெல்லை சென்றடையும்.

அதேபோல், நெல்லையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15க்கு சென்னை வந்தடையும்.

இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய இடங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ.16, 23, 30 மற்றும் டிச.7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் எனத் தெரிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai future project