ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு : முதல்வர் எடப்பாடிபழனிசாமி அறிவிப்பு

ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு : முதல்வர் எடப்பாடிபழனிசாமி அறிவிப்பு
X

தமிழகத்தில் உள்ள அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி இருப்பாளி பகுதியில் அம்மா சிறு மருத்துவமனையை தொடங்கி வைத்த பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்: தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்திருக்கும் 2.6 கோடி அட்டைதாரர்களுக்கு தலா 2,500 ரூபாய் வழங்கப்படும். 2021 -ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த பொங்கல் பரிசு வரும் 2021 ஜனவரி மாதம் 4-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசுத் தொகை தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, திராட்டை, முந்திரியு, முழு கரும்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!