சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்: வருமானவரித்துறை அதிரடி
சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் வாங்கிய ரூ.15 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை முடக்கும் பணியில், வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டு, வருமானவரித்துறையினர் சசிகலாவிற்கு சொந்தமான 180 இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில், அவர்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததும், கணக்கில் வராமல் பலகோடி சொத்துக்கள் சேர்த்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த 5 வருடமாக பினாமி சொத்துக்கள் தொடர்பாக ஆவணங்களை சரிபார்த்து, பினாமி சொத்துக்களை முடக்கும் பணியில், வருமானவரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ.1600 கோடி சொத்துக்களையும், அடுத்தபடியாக ரூ.300 கோடி சொத்துக்களையும் முடக்கியது. கடைசியாக ரூ.2,000 கோடி மதிப்பிலான அவரது பங்களாவையும் முடக்கினார்.
தொடர்ந்து ரூ.4,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ள நிலையில், சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் வாங்கிய ரூ.15 கோடி சொத்துக்கள் பினாமி சொத்து என உச்சநீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டதையடுத்து, பினாமி சொத்துக்களை முடக்கும் பணியில், வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu