ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகை.. விரைவில் குட் நியூஸ்.. கசிந்த தகவல்
பைல் படம்.
தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.1000 வழங்குவதில் எந்த பிரச்னையும் இருக்காது என்று அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகையாக வழங்கப்படும். அதுமட்டுமன்றி பொங்கலிட்டு வழிபடுவதற்குத் தேவையான அரிசி, வெள்ளம், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆங்கிலப் புத்தாண்டு தொடங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், அடுத்ததாக பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. இதனால் பொங்கல் பரிசு எப்போது கிடைக்கும் என பொதுமக்கள் ஆவலாக எதிர்ப்பார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இததனிடையே மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி படிப்படியாக ரூ.6000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரணம் அளிப்பதற்காக ரூ.1,486 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். மேலும் தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க திட்டமிட்டுள்ள நிலையில் பொங்கல் பரிசுத் தொகையை எப்படி வழங்குவது என்று அரசு ஆலோசித்து வருகிறது. பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.1000 வழங்கலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ள நிலையில் அவர் சென்னை திரும்பிய பிறகு பொங்கல் பரிசு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் எந்த பிரச்னையும் இருக்காது என்று அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu