ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம்

ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம்
X
ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்

ஒடிசா ரயில் விபத்து சம்பவம் ஒட்டு மொத்த தேசத்தையே பெரும் துயரில் ஆழ்த்தி இருக்கிறது. ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

விபத்தில் சிக்கி, உயிர்பிழைத்தோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இதனிடையே மீட்பு பணிகளும் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், விபத்துக்குள்ளான ரயிலில் நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

விபத்து ஏற்பட்டதும் ஒடிசா முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், அம்மாநிலத்துக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்திருந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், இன்று நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்து இருந்தார்.

இதனிடையே சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முக ஸ்டாலின் கூறுகையில், ஒடிசா ரயில் விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் தொலைபேசியில் பேசினேன். ஒடிசாவில் தங்கியிருந்து மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் கட்டுப்பாட்டு அறை நேற்றிரவு முதல் செயல்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உதவி அழைப்புக்காக செல்போன் மற்றும் வாட்ஸ்அப் எண்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒடிசா மாநில தலைமை செயலாளர் உடன் கானொலி காட்சி வாயிலாக தமிழக அரசு பேசியது. ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும். ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு. காயம் அடைந்த தமிழர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்