ரூ.212 கோடியில் உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைப்பு..!

ரூ.212 கோடியில் உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைப்பு..!
X
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை தரமணி டைடல் பார்க்கில் ரூ .212 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை தரமணியில் தொழில்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சென்னை, தரமணி டைடல் பார்க்கில் உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம் ரூ. 212 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மாநாட்டில் பங்கேற்ற முதல்வர், திறன்மிகு மையத்தை திறந்து வைத்தார்.

மேலும் திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.77 கோடியில் அமையவுள்ள டைடல் பூங்காக்களுக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.ஸ்ரீ பெரும்புதூர் மற்றும் ஓசூர் சிப்காட் தொழிற் பூங்காக்களில் ரூ 33.46 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில் புத்தாக்க மையங்களையும் திறந்துவைத்தார்.

இதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது எனவும், உற்பத்தி துறையில் தெற்காசியாவிலே தமிழகம் சிறந்து விளங்குகிறது எனவும், தொழில்துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்டார்.

Tags

Next Story