சில தினங்களில் விவசாயிகளுக்கு ரூ.2,000: மாநில அரசு 'அப்ரூவல்'

சில தினங்களில் விவசாயிகளுக்கு ரூ.2,000: மாநில அரசு அப்ரூவல்
X

பைல் படம்.

கிசான் சம்மன் திட்டத்தில் இன்னும் சில தினங்களில் விவசாயிகளுக்கு ரூ.2,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் கடந்த 2018ம் ஆண்டு முதல் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், விவசாயிகள் பயிர் சாகுபடி செய்யத் தேவையான இடு பொருட்களை வாங்க வசதியாக உதவித்தொகை அளித்து வருகிறது.

இந்த உதவி தொகை, விவசாய குடும்பங்களுக்கு 4 மாதத்திற்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம், ஆண்டுக்கு 3 தவணைகளாக, ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 11 கோடியே 44 லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள்.

இதுவரை 9 தவணைகளை விவசாயிகள் பெற்றுள்ள நிலையில், 10வது தவணையாக ரூ.2,000 சில நாட்களில் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். தற்போது இந்த தவணைக்காக மாநில வேளாண் துறையினர் 'அப்ரூவல்' அளித்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இன்னும் சில நாட்களில் மத்திய அரசு விடுவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாநில அரசு ஒப்புதலுக்குப்பிறகு, ஒரே வாரத்திற்குள் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 48 லட்சத்து 62 ஆயிரத்து 212 பேர் கிசான் சம்மன் திட்டத்தில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விபரங்களுக்கு https://pmkisan.gov.in/BeneficiaryStatus.aspx என்ற இணையதள முகவரியில் உங்களுடைய ஆதார் எண், வங்கி கணக்கு எண் அல்லது தொலைபேசி எண்ணை பயன்படுத்தி தற்போதைய நிலையின் விபரங்களை அறியலாம்.

அதற்கான முழுவிபரங்கள் மற்றும் வழிமுறைகள்:

https://www.instanews.city/tamil-nadu/did-you-get-paid-for-the-kisan-summon-scheme-how-to-view-online-976501 என்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

Tags

Next Story