விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ரூ.11,250 கோடியில் காவிரி புனரமைப்பு திட்டம்

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ரூ.11,250 கோடியில் காவிரி புனரமைப்பு திட்டம்
X

காவிரி ஆறு (கோப்பு படம்).

தமிழகத்தில் ரூ.11,250 கோடியில் காவிரி புனரமைப்பு திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.

மாசுக்களை அகற்றி காவிரியை புனரமைக்க ரூ. 11 ஆயிரத்து 250 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள திட்டம் விரைவில் அமலாக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்த போது கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகளால் மாசடைந்துள்ள காவிரி நதியை மீட்டெடுக்க நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டத்தை நிறைவேற்றப் போவதாக தமிழக சட்டசபையில் தற்போதைய முதல்வர் பழனிசாமி 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 110 வது விதியின் கீழ் அறிவித்திருந்தார்.

இதன்படி மாசு படுவதில் இருந்து காவிரி ஆற்றை காப்பாற்றி புனரமைப்பு செய்வதற்கு முழுமையான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. 11 ஆயிரத்து 250 கோடி மதிப்பில் ஆன இந்த நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை மத்திய அரசின் ஜல் சக்தி துறையின் கீழ் இயங்குகிற மத்திய நீர் ஆணையம் (சி டபிள்யூ சி )தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.இதனால் மாநிலம் முழுவதும் காவிரி ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளுடன் இணைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான நீர் நிலைகளை மாசுபடுத்துதலில் இருந்தும் கழிவுநீர் கலப்பதிலிருந்தும் தடுக்க வழி பிறக்கிறது.

இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்பட இருக்கிறது. முதல் கட்ட திட்டம் 1950 கோடியிலும் இரண்டாம் கட்ட திட்டம் 8,750 கோடியிலும் செயல்படுத்தப்படும். இதர பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது. இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும்.

இது குறித்து மத்திய நீர்வளத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மத்திய நீர் ஆணையம் நாக்பூரில் தென் மாநில அதிகாரிகளை கொண்டு உயர் மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியது. நாங்கள் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகள் மற்றும் பிற விஷயங்கள் பற்றி விவாதித்தோம் மத்தியில் புதிய அரசு பதவி ஏற்றதும் நடந்தாய் வாழி காவிரி திட்டம் பற்றி அதிகாரப்பூர்வ உத்தரவை மத்திய நீர் ஆணையம் பிறப்பிக்கும் மேட்டூர் முதல் திருச்சி வரை முதல் கட்ட திட்டம் 19 58 கோடியில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. ரூ 8750 கோடியிலான இரண்டாம் கட்ட திட்டம் திருச்சி முதல் காவிரி கடலில் கலக்கிற பகுதி வரையிலான பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா