மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்
Scholarship For Girl Students-அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம், சட்டம் ,வேளாண்மை ,கால்நடை ,மருத்துவம் , பாலிடெக்னிக் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இந்த உதவி தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விப் பயிலும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உயர்கல்வி உறுதி தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்ட நிலையில் மாணவிகள் இத்திட்டத்திற்காக விண்ணப்பித்தனர்.
அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி சேர்ந்த மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தரும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். மாணவிகளுக்கு ரூ.1000 திட்டம் , மாதிரி பள்ளி, சீர்மிகு பள்ளி தொடக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu