முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு
X

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ-1 கோடி இழப்பீடு வழங்க சென்னை ஐகோர்ட் கேரளாவை சேர்ந்த ஷர்மிளாவிற்கு உத்தரவிட்டு உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த சி. விஜயபாஸ்கர். எம்.பி.பி.எஸ். படித்த டாக்டரான இவர் கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் விஜயபாஸ்கர் தன்னிடம் 14 கோடி ரூபாய் பணம் வாங்கிவிட்டு அதில் மூன்று கோடியை மட்டுமே திருப்பி செலுத்தினார். மீதி பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார். நேரில் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தார் என்று கேரளாவை சேர்ந்த ஷர்மிளா என்ற பெண் புகார் செய்தார். மேலும் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றிலும் அவர் மீது அவர் அவதூறாக கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் ஷர்மிளா மீது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ஷர்மிளா விஜயபாஸ்கருக்கு ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா காலத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பாக செயல்பட்டதாகவும் நீதிபதி அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!