ராயல் என்ஃபீல்டு பிரியர்களுக்கு குட் நியூஸ்... தயார் நிலையில் எலெக்ட்ரிக் பைக்
ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் பைக்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஏற்கனவே அறிவித்த அதன் எலெக்ட்ரிக் பைக் குறித்து புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில், எலெக்ட்ரிக் வாகனங்களின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது. வரும் காலங்களில், நாடுமுழுவதும் எங்கு பார்த்தாலும் எலெக்ட்ரிக் வாகனங்களே தென்படலாம். அந்த அளவுக்கு, எலெக்ட்ரிக் வாகனச்சந்தை மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது.
ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டிபோட்டுக்கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகின்றனர். இந்த போட்டியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் இணைந்துள்ளது.
இந்நிலையில், தனது முதல் எலெக்ட்ரிக் பைக் குறித்த முக்கியமான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
இதற்காக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஸ்பானீஷ் நாட்டைச் சேர்ந்த ஸ்டார்க் மோட்டார்சைக்கிள் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் இணைந்து தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை தயாரித்து வருகிறது. இந்த பைக்கிற்கு L1A என்ற கோட் பெயரை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர, முதல் புரோட்டோடைப் இந்தாண்டு இறுதியில் மக்கள் முன் காட்சிக்கு கொண்டு வரப்படும் என்றும், அடுத்த ஆண்டு (2024) முதல் பாதியில் இந்த பைக் விற்பனைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் ராயல் என்ஃபீல்டு தயாரிக்கும் முதல் எலெக்ட்ரிக் பைக்கானது, தோற்றத்தில் ப்ரீமியமாகவும், ரக்கர்ட் லுக்கில் இருந்தாலும், பெர்ஃபாமன்ஸ் அடிப்படையில் அதிக திறன் கொண்ட பைக்காக இருக்காது என தெரிகிறது. அதேபோல் ராயல் என்ஃபீல்டின் இரண்டாவது எலெக்ட்ரிக் பைக் ஸ்டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இன்ஃப்ளூயன்ஸில் ஆஃப் ரோடிங் பெர்ஃபாமென்ஸ் கொண்ட பைக்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முதல் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பைத் தமிழகத்தில் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக செய்யாறு பகுதியில் இந்நிறுவனம் 60 ஏக்கர் நிலப் பரப்பில் புதிய தொழிற்சாலை அமைக்கவுள்ளது.
அந்த தொழிற்சாலை 2025ம் ஆண்டு தயாராகும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக வல்லம் வடங்கல் தொழிற்சாலையில் தயாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu