பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்

பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்
X

பழனி மலையின் ரோப் கார் 

பராமரிப்பு பணிகளுக்காக பழனி முருகன் கோவிலில் 45 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வர ரோப்கார், வின்ச் ஆகிய வசதிகள் உள்ளன. அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் வின்ச் சேவை ராக்கால பூஜை வரை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் 45 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது. வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ஜூன் 16 முதல் ஜூலை 30 வரை சேவை நிறுத்தம் செய்யப்படுகிறது.

ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் வழக்கமாக நடைபெற்று வரும் நிலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக தற்போது இச்சேவை நிறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!