Right to Service Bill- சேவை உரிமைச் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்த, அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Right to Service Bill- சேவை உரிமைச் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்த, அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
X

Right to Service Bill- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் (கோப்பு படம்)

Right to Service Bill- தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில், சேவை உரிமைச் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்த வேண்டும் என, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Right to Service Bill, Anbumani Ramadoss- இன்று தொடங்கும் தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில், சேவை உரிமைச் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்த வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களிலும், நிா்வாகக் கட்டமைப்பிலும் ஊழலை ஒழிக்க, சேவை பெறும் உரிமைச் சட்டம் என்ற சிறந்த ஆயுதம் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்த அரசு முன்வராதது வருத்தமளிக்கிறது. இந்த சட்டத்தை அமல்படுத்தக் கோரி கடந்த காலங்களில் வழக்குகள் தொடரப்பட்டபோது, ‘தமிழகத்தில் நட்புறவுடன் கூடிய மக்கள் நிா்வாகம், குடிமக்கள் அணுகுமுறை, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கால அவகாசம் ஆகிய திட்டங்கள் நடைமுறையில் இருப்பதால் சேவை பெறும் உரிமைச் சட்டம் தேவையில்லை’ என்று தமிழக அரசு விளக்கமளித்தது.

ஆனால், இந்தத் திட்டங்கள் எதுவுமே பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் சேவை கிடைப்பதையோ, கையூட்டு ஒழிக்கப்படுவதையோ உறுதி செய்யவில்லை. அதற்கு, அரசு அலுவலகங்கள் மக்களுக்கு சேவை வழங்கும் இடங்களாக இருப்பதை உறுதி செய்ய சேவை உரிமைச் சட்டம் தான் ஒரே தீா்வு. எனவே, இன்று (திங்கள்கிழமை) தொடங்கவுள்ள பேரவை கூட்டத் தொடரில் இதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்ய, முதல்வா் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil