Richest district in Tamilnadu தமிழ்நாட்டில் பணக்கார மாவட்டம் எது தெரியுமா? ஆச்சர்யப்படுவீங்க
தொழில்துறை, உற்பத்தி, ஆலைகள், ஏற்றுமதி, விவசாயம் என மாவட்டத்தின் வருமானத்தை வைத்தே ஒரு மாவட்டத்தின் வருமானம் கணக்கிடப்படுகிறது. மொத்த வருமானத்தையும் ஒன்று கூட்டி அதனை அங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை கொண்டு வகுத்தால் சராசரி தனி நபர் வருமானம் தெரிந்துவிடும். அதில் எது மிகுதியாக இருக்கிறதே அதுவே பணக்கார மாவட்டம் என்று கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் பணக்கார ஊர் என்றால் பலருக்கு உடனே தோன்றுவது சென்னையா? கோயமுத்தூரா என்று தான், ஆனால் இவற்றையெல்லாம் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இருப்பது எந்த ஊர் தெரியுமா? கன்னியாகுமரி மாவட்டம் தான்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் மக்கள் தான் அதிக வசதியாக வாழும் தமிழ்நாடு மாவட்டங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றனர். அவர்களின் வருமானம், வாழ்க்கைமுறையைப் பற்றி பார்ப்போம்,
தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் அதிகம் இருப்பது இந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் தான், அதே மாதிரி கேரள அரசுப்பணிகளிலும் இங்குள்ள நிறைய பேர் பணிபுரிகிறார்கள், தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளில் வேலை பார்ப்பதும் அதிகம் இந்த ஊர் மக்கள் தான். கன்னியாகுமரியின் தனிநபர் வருமானம் ரூ.81,094.
ரப்பர் ஏற்றுமதியில் இந்த மாவட்டம் முன்னணியில் உள்ளது, அதைப்போல இங்கு அதிக மீன்வளம் உள்ள அரபிக்கடல் இருக்கிறது, விவசாயம் செய்வது இங்கு குறைவு, விவசாயத்தில் நஷ்டம் வந்தாலும் வேறு வேலை செய்து குடும்பத்தை சமாளிக்கும் திறமையானவர்கள் இங்கு இருக்கிறார்கள். அது மட்டுமின்றி கூலி வேலைகளுக்கு கூட தமிழ்நாட்டில் வேறு இடங்களை விட இங்கு ஊதியம் அதிகம்.
இந்த மாவட்டத்தில் 95%-க்கு மேல் காங்கிரீட் வீடுகள் தான் உள்ளன, தமிழ்நாட்டில் மீனவ கிராமங்கள் என்றாலே ஓலைக்குடிசை,சிறிய வீடுகள் என்று காட்சியளிக்கும் அதில் இந்த மாவட்டம் ஒரு விதிவிலக்கு, இங்குள்ள கடற்கரை கிராமங்களை கிராமங்கள் என்று சொல்வதற்கு பதிலாக கடற்கரை நகரங்கள் என்று சொல்லலாம். முன்னேறுவதற்கு ஜாதியோ நமது வாழ்விடமோ தடையில்லை என்பதற்கு இந்த மாவட்ட மீனவ மக்கள் ஒரு எடுத்துக்காட்டு.
இங்குள்ள மக்கள் அதிகம் ஆடம்பர வாழ்க்கையை விரும்பக்கூடியவர்கள், சொந்த தொழில் துவங்குவதில் ஆர்வம் காட்டக்கூடியவர்கள், பசுமை, நீர்வளம் என செழிப்பாக இருக்கும் இந்த ஊரில் வாழ்பவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் தான்.
இங்கு யாரும் யாருக்கும் அடிமை இல்லை, எல்லோராலும் பெரிய உயரத்தை எட்ட முடியும், அதற்கு கல்வியும், உழைப்பும், தன்னம்பிக்கையும் அவசியம்.
அந்த தன்னம்பிக்கையும், கல்வியும், உழைப்பும் இங்குள்ள மக்களிடமும் தானாகவே வந்து இருக்கிறது, அதுவே இங்குள்ள அனைத்து மக்களும் நல்ல நிலைமையை அடைய உந்துகோலாக இருக்கிறது.
படித்தால், உழைத்தால் எல்லோராலும் நல்ல நிலைமையை அடையலாம் என்பதற்கு கன்னியாகுமரி ஒரு சிறந்த உதாரணம்.
பல்வேறு தொழில் துறை நிறுவனங்களும், தொழிற்சாலை, வெளிநாட்டு நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளும், அதிக சம்பளம் பெற்று வாழும் மக்கள் சென்னையில் தான் அதிகம் இருக்கின்றனரே, ஏன் சென்னை முதலிடத்தில் வரவில்லை என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கலாம்.சென்னை எந்த அளவிற்கு வளமான மக்களை கொண்டுள்ளதோ அதே அளவிற்கு ஏழை மக்களையும் நடுத்தர மக்களையும் கொண்டுள்ளது. எனவே எல்லா வகையான மக்களும் அதிகமாக வாழ்வதால் சென்னையின் வாழ்வதால் தனி நபர் வருமானமும் குறைகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu