செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தால் நஷ்டம் ஏற்படுவதாக அரிசி ஆலைகள் சங்கம் கருத்து

செய்தியாளர்களிடம் பேசிய , தமிழ்நாடு நெல் அரிசி, ஆலை மில் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் துளசிலிங்கம்
தமிழக அரசு ரேஷன் கடையில் விநியோகம் செய்து வரும் செரிவூட்டப்பட்ட அரிசிகளை உற்பத்தி செய்வதால் அரிசி ஆலை உரிமையாளர்கள் மிகப்பெரிய நஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரிசி ஆலைகள் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநிலச் தலைவர் துளசிலிங்கம் தெரிவித்தார்
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் மாநில பொதுக்குழு கூட்டமானது, தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தினை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் தொடங்கி வைத்த நிலையில், தமிழகத்தில் தற்போது அரிசி ஆலை உற்பத்தியாளர்களின் நிலை மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், 25 கிலோ மற்றும் அதற்கு கீழ் உள்ள அரிசி பேக்குகளுக்கு அரசு விதித்துள்ள 5% சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும், தமிழக அரசு நெல்லிற்கு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டுமே சந்தை கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர்ஸ தமிழ்நாடு நெல் அரிசி, ஆலை மில் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் துளசிலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காலம் காலமாக அரிசிக்கு வரியில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் தற்போது 25 கிலோவிற்கு கீழ் உள்ள அரிசி பைகளுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் அந்த வரியை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது தமிழக அரசு மின் கட்டண உயர்வை அதிகரித்துள்ளதால் அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே, தமிழக அரசு இந்த மின் கட்டண உயர்வை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து, தற்போது தமிழக அரசு ரேஷன் கடையில் விநியோகம் செய்து வரும் செரிவூட்டப்பட்ட அரிசிகளை அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் தயார் செய்யும் போது மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், குறிப்பாக ஒரு குவிண்டாலுக்கு தாங்கள் ரூ.140 கேட்கும் நிலையில், வெறும் 40 ரூபாய் மானியத்தை அரசு தருவதால் உற்பத்தி செலவை கூட தங்களால் ஈடுகட்ட முடியவில்லை.
இதனால் அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை வந்துள்ளதாகவும், ஆகவே செரிவூட்டப்பட்ட அரிசிக்கு அரசு தரும் மானியத்தை உயர்த்தி தர வேண்டும் என்றார் துளசிலிங்கம்ர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu