கனமழை நிவாரண பணிகள்: தூத்துக்குடியில் முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கனமழை நிவாரண பணிகள்:  தூத்துக்குடியில் முதலமைச்சர் தலைமையில்  ஆய்வுக் கூட்டம்
X

கனமழை நிவாரண பணிகள் குறித்து  தூத்துக்குடியில் முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி: கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள், நிவாரணப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (2.12.2021) தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதாஜீவன், மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் செ. சண்முகையா, ஜி.வி. மார்க்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ், தொழில் ஆணையர் மற்றும் இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கி. செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் டி. சாருஸ்ரீ, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்