தமிழகம் முழுவதும் குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் ரத்து : அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் ரத்து : அரசு அறிவிப்பு
X
தமிழகம் முழுவதும் நடக்க இருந்த சிறப்பு கிராமசபை கூட்டம் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் சுதந்திரதினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் கிராம ஊராட்சி சார்பாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தற்போது இரவு ஊரடங்கு மற்றும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.

மேலும் வெள்ளி முதல் ஞாயிறு வரை பொதுமக்கள் திருக்கோயில், சர்ச், மசூதி ஆகியவைகளில் வழிபாடு, தரிசனம் மேற்கொள்ள தடை விதித்தது.

அவ்வகையில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் பரவல் ஏற்படும் என்ற வகையில் வரும் புதனன்று நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபை கூட்டங்களை ரத்து செய்யபடுவதாக தமிழக ஊரக வளர்ச்சி & பஞ்சயாத்து ராஜ் திட்ட இயக்குனர் பிரவீன் நாயர் அறிவித்து இது தொடர்பாக சுற்றிக்கையினை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்