14 கடலோர மாவட்டங்களில் 1,80,000 மீனவ குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை -முதல்வர் ஸ்டாலின்

14 கடலோர மாவட்டங்களில் 1,80,000  மீனவ குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை -முதல்வர் ஸ்டாலின்
X
நிவாரணத் தொகை குடும்பம் ஒன்றிற்கு ரூ.5000/-லிருந்து ரூ.6000ஆக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு மீன்பிடி குறைவு கால நிவாரணத்தொகையாக மீனவ குடும்பம் ஒன்றிற்கு ரூ.5000/- வீதம் வழங்கி வருகின்றது.

மீனவர்களுக்கான மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை ரூ.5000/-லிருந்து ரூ.6,000/- ஆக உயர்த்தப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றிடும் வகையில், நடப்பு ஆண்டிலிருந்து (2021-22) மீனவர்களுக்கான மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை குடும்பம் ஒன்றிற்கு ரூ.5000/-லிருந்து ரூ.6000/. ஆக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1,80,000மீனவ குடும்பங்களுக்கு, குடும்பம் ஒன்றுக்கு ரூ.6000/ வீதம் மொத்தம் ரூ.108.00 கோடி மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக திருவள்ளுர் முதல் இராமநாதபுரம் வரையிலான 11 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.24 இலட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையாக மொத்தம் 74.40 கோடி ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

மேலும், கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 2.10 இலட்சம் மீனவர்களுக்கு அவர்கள் செலுத்திய சந்தாபங்குத் தொகை ரூ.1,500/- உடன் அரசு நிவாரணத் தொகை ஒவ்வொரு மீனவருக்கும் ரூ.3000/. என்ற வகையில் மொத்தம் ரூ.4,500/- வீதம் நிவாரணத் தொகையாக மீனவர்களுக்கு வழங்கப்படும்.

இதற்கென அரசின் பங்குத் தொகை முதற்கட்டமாக திருவள்ளுர் முதல் இராமநாதபுரம் வரையிலான 11 கடலோர மாவட்டங்களிலுள்ள 1.48 இலட்சம் கடல் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும், கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 2.09 இலட்சம் மீனவ மகளிருக்கு அவர்கள் செலுத்திய சந்தா பங்குத் தொகை ரூ.1500/- உடன் அரசு நிவாரணத் தொகை ஒவ்வொரு மீனவ மகளிருக்கும் ரூ.3000/- வீதம் மொத்தம் ரூ.4500/ வீதம் நிவாரணத் தொகை வழங்கப்படும். இதற்கொன் அரசின் பங்குத் தொகையாக ரூ.62.80 கோடி நிதி ஒப்பளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக திருவள்ளூர் முதல் இராமநாதபுரம் வரையிலான 11 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.46 இலட்சம் மீனவ மகளிருக்கு நிவாரணத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும் மீன்பிடி குறைவு கால நிவாரணம் மற்றும் சேமிப்பு மற்றும்

நிவாரணத் தொகைகள் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மீன்பிடி குறைவு காலமாக அனுசரிக்கப்படும் ஜனவரி 2022 மற்றும் ஏப்ரல் 2022 மாதங்களில் வழங்கப்படும்.

இவ்வாறு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கால்நடைபராமரிப்பு, பால்வளம், மீன்வளம் (ம) மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!