பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு: உச்ச நீதிமன்றம் அதிரடி

பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு: உச்ச நீதிமன்றம் அதிரடி
X

பேரறிவாளன்

பேரறிவாளனை யார் விடுவிப்பது என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கும் நிலையில் ஏன் அவரை விடுவிக்கக் கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளது.

தன்னை உச்ச நீதிமன்றம் விடுவிக்க வேண்டுமென பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற அமர்வு இன்று விசாரணை நடத்தியது.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், பேரறிவாளனை யார் விடுவிப்பது என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கும் நிலையில் அவர் ஏன் சிறையில் இருக்க வேண்டும்? ஏன் பேரறிவாளனை விடுவிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர்.

மேலும், பேரறிவாளனை விடுவிப்பதே இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு. பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. எனக் குறிப்பிட்டனர்

முன்னதாக, தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரைத்த பிறகும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாக பேரறிவாளன் தரப்பு நீதிமன்றத்தில் வாதம் செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!