பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ள மறுவடிவமைப்பு நிலையங்களின் மாதிரி படங்கள் வெளியீடு
பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ள மறுசீரமைப்பு ரயில்நிலையங்களின் மாதிரி படங்கள்.
தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். இந்நிகழ்ச்சி மாலை 5.45 மணியளவில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளாமானோர் கலந்துகொள்கின்றனர். இதனையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன் உள்ளிட்டவைகள் வான்வழி வெளியில் பறக்க தடை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
மறுவடிவமைப்பு செய்யப்பட்ட நிலையங்களின் மாதிரி படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம்👆
ராமேஸ்வரம் ரயில் நிலையம்👆
மதுரை ரயில் நிலையம்👆
காட்பாடி ரயில் நிலையம்👆
கன்னியாகுமரி ரயில் நிலையம்👆
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu