உங்க ரேஷன் கார்டில் 2 நிமிடத்தில் மொபைல் எண் பதிவு
ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி பதிவு செய்திருந்தால் தான் நீங்கள் வாங்கும் பொருட்களின் ரசீது உங்களுக்கு குறுஞ்செய்தியாக வரும். ஆனால், ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது. மண்டல அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் எஎ தெரிவிப்பார்கள்.
அது தேவையில்லை. தற்போது அதற்கான சேவைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதற்காக 1967 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தமிழுக்கு ஒன்றை அழுத்தவும். அடுத்து குடும்ப அட்டை வைத்திருப்பவரா என்பதற்கு 2ஐ அழுத்தினால் சேவை அதிகாரி உங்களுடன் பேசுவார்.
அவர் உங்கள் ரேஷன் கார்டில் மேலே உள்ள எண்ணை கேட்பார். உதாரணமாக 005/w/ 33657778 என்ற எண்ணை கூற வேண்டும். பின்னர் குடும்ப அட்டையில் உள்ள ஒருவரின் ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும். நீங்கள் இந்த பிரத்யே எண்ணை தொடர்புகொள்வதற்கு முன், ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் கையில் வைத்திருக்க வேண்டும்.
இரண்டு கேள்விகளுக்கும் பதில் தெரிவித்தவுடன் நீங்கள் விரும்பிய மொபைல் நம்பரை பதிவு செய்யலாம். அல்லது நம்பரை மாற்றலாம். அடுத்த 2 நிமிடங்களில் உங்கள் மொபைல் எண் செயல்பாட்டுக்கு வந்துவிடும். இதற்காக மண்டல அலுவலகம் செல்லும் அவசியம் இல்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu