சென்னைக்கு ரெட் அலர்ட் விடுப்பு: அவசர உதவி எண்களும் வெளியீடு

சென்னைக்கு ரெட் அலர்ட் விடுப்பு: அவசர உதவி எண்களும் வெளியீடு
X
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவி மைய எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரவு 8.30 மணி முதல் தற்போது வரை 20செ.மீ மழை பதிவாகி உள்ளது.
இதனிடையே, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை சென்னை மாநகராட்சி, அறிவித்துள்ளது.

கட்டணமில்லாத இலவச தொலைபேசி எண்: 1913, அத்துடன், 04425619206, 04425619207, 04425619208, ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், 9445477205 எண்ணிற்கு வாட்ஸாப்ப் மூலமாக புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!