தீபாவளிக்கு முன் 3 நாட்கள் ரேஷன் கடை திறப்பு- மகிழ்ச்சியான செய்தி
நியாயவிலைக்கடை (கோப்பு படம்)
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 4-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் முதன்மையானது தீபாவளி. தீபாவளி பண்டிகையின்போது வீடுகளில் இனிப்பு மற்றும் பலகாரங்கள் செய்து அதை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து வழங்கி மகிழ்வது வழக்கம்.
அந்த வகையில் இனிப்புகள் தயாரிப்பதற்கு தேவையான அரிசி மற்றும் சர்க்கரை ஆகியவற்றை நியாயவிலைக் கடைகள் தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கு துறை அமைச்சர் சக்கரபாணி நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்த நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் அனைத்து மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரையின்படி சிறப்பு அத்தியாவசிய பொருட்கள் நவம்பர் மாதத்திற்கான அதிகபட்சமான முன் நகர்வினை முழுமையாக முடிக்கப்பட வேண்டும் அதன்படி 1 -11- 2021, 2 -11 -2021 மற்றும் 3- 11- 2201 ஆகிய தினங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த சுற்றறிக்கையின் படி தீபாவளி பண்டிகைக்கு முன்பாக மூன்று நாட்கள் நியாயவிலைக் கடைகள் திறந்து செயல்படும் என்பது தமிழகத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu