இராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வு
2021-2022ம் கல்வியாண்டுக்கான'நீட்' தேர்வு 2021 அக்.,12ல் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கவுன்சிலிங் நடந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டு கவுன்சிலிங்கில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரவுள்ளனர்.
வாலாஜா அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் புகழரசன், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும்,
மோசூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவி அம்பிகா, திருவண்ணாமலை அரசினர் மருத்துவக் கல்லூரியிலும்,
வாலாஜா அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தமிழ்செல்வி, திருவள்ளூர் அரசினர் மருத்துவக் கல்லூரியிலும்,
ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ருதி, கிருஷ்ணகிரி அரசினர் மருத்துவக் கல்லூரியிலும்,
திமிரி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ரஞ்சனி, திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரியில் படிக்க தேர்வாகி யுள்ளனர்.
வாலாஜா அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி வசுநித்ரா, கோவை ராம கிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரியிலும்,
வளர்புரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர் கார்த்திகேயன், சென்னை வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியில் படிக்க தேர்வாகியுள்ளனர்.
திமிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ரஞ்சனி தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேராமல் தனது செல்போனில் யுடியூப் தளங்களில் உள்ள இலவச வீடியோக்களை பார்த்து தேர்வு எழுதியதாக தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu