/* */

காவேரிப்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கி ஐடிஐ படித்த வாலிபர் பலி

காவேரிப்பாக்கம் அடுத்த ஆலப்பாக்கம் ஏரியில் நண்பருடன் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியானார்.

HIGHLIGHTS

காவேரிப்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கி ஐடிஐ படித்த வாலிபர் பலி
X

ஏரியில் மூழ்கி உயிரிழந்த விக்னேஷ்

இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஆலப்பாக்கம் பஜனைக்கோயில் தெருவைச்சேர்ந்த விக்னேஷ்,(23),இவர் ஐடிஐ படித்து விட்டு வேலைத் தேடிவந்ததாகக் கூறப் படுகிறது..

இந்நிலையில் விக்னேஷ் அவருடைய நண்பர் பெருமாளுடன் ஏரிக்குச் சென்றார். அங்கு ,பெருமாள் கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது விக்னேஷ் மட்டும் நீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது , திடீரென விக்னேஷ் ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கினார். உடனே அதிர்ச்சியில் பெருமாள், விக்னேஷைக் காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார்.

அதனைக்கேட்டு அருகிலிருந்தவர்கள் வந்து விக்னேஷை மீட்டு கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது, விக்னேஷ் உயிரிழந்தது தெரிய வந்தது.

மேலும்,இதுகுறித்து தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விக்னேஷின் சடலத்தைக்கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விக்னேஷின் தாயார் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 16 Dec 2021 4:11 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...