மகளை மணம்முடித்து வைக்க பெண்ணின் பெற்றோரை மிரட்டிய வாலிபர்

மகளை மணம்முடித்து வைக்க பெண்ணின் பெற்றோரை மிரட்டிய வாலிபர்
X
நெமிலி அருகே பெண்ணின் பெற்றோரிடம் மகளை காதலிப்பதால் மணமுடித்து வைக்கவேண்டுமென கத்தியைக்காட்டி கொலைமிரட்டல் விடுத்த வாலிபர் கைது

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியையடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தைச் சேதுபதி(22),மற்றும், சயனபுரத்தைச்சேர்ந்த நண்பன் ஆகாஷுடன் சேர்ந்து நெமிலியருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் தொழிலாளி ஒருவர் வீட்டிற்குச் சென்று ,அவரது மகளை காதலிப்பதால், எனக்குதான் திருமணம் செய்து வைக்கவேண்டும் இல்லையெனில் கொலைசெய்து விடுவேன் என்று கத்தியைக்காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக தொழிலாளி நெமிலி போலீஸில் புகார. அளித்தார். அதன்பேரில் விசாரித்த போலீஸார் சேதுபதி,ஆகாஷ் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags

Next Story
ai marketing future