சோளிங்கர் அருகே வயலில் மின்கம்பி அறுந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

சோளிங்கர் அருகே வயலில் மின்கம்பி அறுந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
X

மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்மணி 

சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரத்தில் மின்கம்பி அறுந்து வயலில் விழுந்ததில் நடவுசெய்து கொண்டிருந்த மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. அவரது மனைவி உஷா(65). இவர் அதே பகுதியை சேர்ந்த கெங்காதரன் என்பவரது நிலத்தில் நெல் நாற்று நடவு செய்து கொண்டிருந்தார்.

அப்போது வயலில் மீது சென்ற மின் கம்பி திடீரென அறுந்து மூதாட்டி உஷா மீது விழுந்தது. அதில் உஷா உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .

இது குறித்து தகவலறிந்த சோளிங்கர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!