காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஏரி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாகவும் தமிழகத்தின் 3வது பெரிய ஏரியாக உள்ளது. இந்த ஏரி,16கிமீ பரப்பளவுடன் 31அடி உயரத்திற்கு நீர் தேக்கம் கொண்டு 41கிராமங்களுக்கு நீர்பாசனம் செய்யப்பட்டு வருகிறது.
ஆந்திரத்தில் சித்தூர், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் கடந்த சிலநாட்களாகபெய்த மழையால் ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக சித்தூர் அருகே பொன்னையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கலவகுண்டா அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு சுமார் 10ஆயிரம். கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. .
இந்த தண்ணீர் தமிழகத்தில் வேலூர் மாவட்டம் பொன்னை வழியாக வந்து திருவலம் அருகே இராணிப்பேட்டை மாவட்டம் தெங்காலில் உள்ள பாலாற்றில் கலக்கிறது. இதனால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டு வாலாஜா அணைக்கட்டில் நிரம்பி வழிகிறது .
மேலும் வேலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாகவும் நீர் நிலைகள் மற்றும் ஆற்றுப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது..இதன் காரணமாக ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாலாஜா தடுப்பணையில் இடதுபுறம் உள்ள கால்வாய் நீர் திறக்கப்பட்டு உள்ளதால், காவேரிப்பக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது இந்நிலையில் ஏரியின் கொள்ளளவான 31அடி உயரத்திற்கு எட்டவுள்ளதால், ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து வினாடிக்கு சுமார் 300கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது .
ஏரியில் உள்ள 57 மதகுகளை திறந்து பரவலாக நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது காரணமாக நீர்செல்லும் கால்வாய் ஓரமாக உள்ள பகுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வருவாய்துறை மற்றும் போலீசாருக்கு இராணிப்பேட்டை மமாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu