சோளிங்கர் நகராட்சியுடன் இணைவதற்கு கிராம மக்கள் எதி்ர்ப்பு

சோளிங்கர் நகராட்சியுடன் இணைவதற்கு கிராம மக்கள் எதி்ர்ப்பு
X

கலெக்டர்கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் கருத்து  கேட்பு   கூட்டம் நடந்தது

சோளிங்கர் நகராட்சியுடன் இணைப்பதற்காக நடந்த கருத்து கேட்பு சுட்டத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இராணிப்பேட்டை மாவட்டம்,சோளிங்கர் பேரூராட்சியில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.18வார்டுகள் உள்ளன. சோளிங்கர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழன அரசு அறிவித்து உள்ளது. எனவே நகராட்சி அந்தஸ்தைப்பெற சுற்றியுள்ள கிராமங்கள் சிலவற்றை ,சோளிங்கருடன் இணைத்து வார்டுகள் எண்ணிக்கையை உயர்த்திட திட்டமிடப்பட்டு உள்ளது.சோளிங்கர் , அருகிலுள்ள கிராமங்களான சோமசமுத்திரம், பாண்டியநல்லூர் ஆகியவற்றை இணைக்க அப்பகுதி மக்களிடையே கருத்துகேட்பு கூட்டம் தனியார் திருமணத்தில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடந்தது ..

அதில் கலந்து கொண்ட பொதுமக்களில் சிலர் ,அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கிராமங்களைசோளிஙகரில் சேர்த்து சோளிங்கரை நகராட்சி ஆக்கலாம் என்றனர்.

மேலும்,நகராட்சியில் சோமசமுத்திரம் மற்றும் புலிவலம்பஞ்சாயத்துக்களை இணைத்தால் கிராமங்கள் நகராட்சி அந்தஸ்துக்கு உயரும் மேலும் பாதாள கழிவு நீர் கால்வாய் மற்றும்நகராட்சிக்கான சலுகைகள்கிடைக்கும் கிராமம் நகரமாக வளர்ச்சி அடையும் என்று ஆதரித்தவர்கள் பேசினர்.

அப்போது சிலர்,பாண்டியநல்லூர் மற்றும் சோமசமுத்திரம் ஊராட்சிகளை சோளிங்கர் நகராட்சியில் இணைத்தால் வரிஉயரும் 100நாள் வேலை திட்டத்தில் வேலை கிடைக்காமல் போகும்.,அதனால்,வளமான விளை நிலங்கள் வீட்டுமனைகளாகமாறிவிடும் விவசாயம் அழிந்து போகும். எனவே நகராட்சியுடன் இணைக்கவேண்டாம் பஞ்சாயத்தாகவே இருக்கட்டும் என்றனர்.

இறுதியாக , அனைவரது கருத்துகளையும் கேட்டறிந்த கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கூறியதாவது

உள்ளாட்சி அமைப்பு தீர்மானம் இல்லாமல் வரிவிதிப்பு செய்ய முடியாது.உள்ளாட்சி அமைப்பே வரியை தீர்மானித்துக்கொள்ளும். நிறைய தாய்மார்கள் உணர்ச்சிகரமாக பேசினார்கள். 1௦௦ நாள் வேலை திட்டம் கிடைக்காது என கவலையுடன் இருக்கிறோம் என்று கூறினார்கள். நீங்கள் சொன்ன கருத்துகள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்டு உள்ளது. அந்தகருத்துக்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இந்தவருடம் நம்முடைய பட்ஜெட்டில் நகர்புறவேலை வாய்ப்புதிட்டம் உருவாக்கியுள்ளனர் .என்பதை உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.மற்றபடி நீங்கள் எல்லோரும் சொன்ன கருத்துக்களை் அப்படியே அரசுக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் பதில் உரைக்கு பின்னர் கூட்டம் நடைபெற்றது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!