ஏரி நீர்வரத்துக் கால்வாய்களை தூர்வார கிராமமக்கள் கோரிக்கை
நெமிலி அருகே ஏரிக்கு பாயாமல் விளைநிலத்தில் பாய்ந்த வெள்ள நீர்
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி, அரக்கோணம் ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமங்களில் தொடர்மழை காரணமாக நீர்வரத்து ஏற்பட்டு பல ஏரிகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் சில கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து இல்லாமல் ஆற்று நீர்க் கால்வாய்கள் உடைப்பு மற்றும் சிதைவுகள் ஏற்பட்டு ஏரிகள் நிரம்ப வாய்ப்பில்லாமல் உள்ளது.
மேலும் அவற்றிற்கு செல்லும் வெள்ளநீர் விளைநிலங்களில் தேங்கி பயிர்களை சேதப்படுத்தியும், மற்றும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. .
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது பொன்னையாறு, பாலாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் கரைபுரண்டு செல்கிறது. அதனால், மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் நிறைந்து காணப்படுவது மகிழ்ச்சி தான், ஆனாலும், ஏரிகளிலிருந்து உபரிநீர் வெளியேறிச் செல்லும் கால்வாய்கள் மற்றும் தொலைதூரத்தில் உள்ள சில கிராம ஏரிகளுக்கு செல்லும் ஆற்றுநீர்க் கால்வாய்கள் சிதைந்தும் , ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலையிலும், கால்வாய் அடைத்தும் உள்ளது. எனவே அவைகளின் வழியாக ஏரிகளுக்கு செல்லும் வெள்ளநீர் பாதையின்றி மாற்றுவழியில் பரவி பல சேதங்களையும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. .
எனவே உபரிநீீர் கால்வாய்கள் , ஏரிக்குச் செல்லும் ஆற்றுக்கால்வாய்களை முறைப்படி சரிசெய்து சீராக்கி தண்ணீர் நிரம்பாத ஏரிகளுக்கு திருப்பி விட்டு அனைத்து ஏரிகளிலும் நீர்நிலைகளிலும் நீர் நிரம்பிட செய்யவேண்டுமென சில கிராமமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu