பக்தர்களின்றி திருப்பாற்கடல்பிரசன்ன வெங்கடேசபெருமாள்கோயில் சொர்க்கவாசல் திறப்பு
ராணிப்பேட்டை மாவட்டம், திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா அரசின் தடையால் பக்தர்களின்றி வெறிச்சோடிக்காணப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா அரசின் தடையால் பக்தர்களின்றி வெறிச்சோடிக்காணப்பட்டது. காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா பக்தர்கள் அனுமதியின்றி நடந்தது.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை அடுத்த திருப்பாற்கடலில் சிவன் கோயிலாக இருந்ததாகவும் அதில் சைவம் , வைணவமும் ஒன்றே! என்பதை உலகுக்கு உணர்த்திகாட்டும் விதமாக வைகுண்ட ஏகாதசியன்று தீவிர வைணவ பக்தரான புண்டரீகமகரிஷிக்கு பிரசன்ன சிவலிங்க ஆவுடையார்மீது பிரசன்ன வெங்கடேச பெருமாளாக நின்று காட்சி தந்து அருள்பாலித்ததாக தல புராணம் கூறுகிறது.
அன்று முதல் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியன்று இக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு நாள்முழுவதும் பல ஊர்களிலிருந்து பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து சுவாமி தரிசனம் செய்து வருவர். அதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது கொரோனாத் தொற்று நாளுக்குநாள. அதிகரித்து வந்த நிலையில் கோயில் திருவிழாக்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. அதன்பேரில் இன்று அதிகாலை அதிகாலை சுமார் 3 மணிக்கு பிரசன்ன வெங்கடேச பெருமாள் மற்றும் இதர மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு ஆஞ்சநேயர் மூலவர், உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு 4 மணிக்கு பக்தர்கள் அனுமதியின்றி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனால் கோயில் திருவிழா களையிழந்து வெறிச்சோடிகாணப்பட்டது நிகழ்ச்சியில், தக்கார் சிவகுமார் கோவில் நிர்வாக அதிகாரி ஏகவள்ளி மற்றும் கோயில் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu