காவேரிப்பாக்கம் அருகே கத்தியைக் காட்டி செல்போன் பறித்த இருவர் கைது

காவேரிப்பாக்கம் அருகே கத்தியைக் காட்டி செல்போன் பறித்த இருவர் கைது
X

பைக்கில் வந்தவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர்கள்

காவேரிப்பாக்கம் அடுத்த பனப்பாக்கத்தில் பைக்கில் வந்தவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்த இருவரை போலீஸார் கைது செய்தனர்

இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தைச்.சேர்ந்தவர்கள் தினேஷ்,கோபி இருவரும. சோளிங்கரில் உள்ள பிரபல தனியார் கம்பெனியில் வேலைசெய்து வருகின்றனர். கடந்த 10ந்தேதி, தினேஷ்,கோபி இருவரும் சேர்ந்து ஒரே பைக்கில் நெமிலியில் நண்பரின் திருமணத்திற்குச் சென்று வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது வழியில் நங்கமங்கலம் புதூர் அருகே ஓச்சேரிச் சாலையில் மர்மநபர்கள் மூன்று பேர் நின்று உதவி கேட்பது போல தினேஷ்,கோபி வந்த பைக்கை நிறுத்தினர். பின்னர், இருவரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி அவர்கள் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன்களையும் பறித்துச்சென்று விட்டனர். இதுகுறித்து தினேஷ் அளித்த புகாரின் பேரில் காவேரிப்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில் , இன்ஸ்பெக்டர் மகாலஷ்மி தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் சீதா மற்றும் போலீஸார் காவேரிப்பாக்கம் அடுத்த பொன்னப்பந்தாங்கல் கூட்ரோடில் வாகன சோதனை செய்தனர். அப்போது பைக்கில் வந்த இருவரை மடக்கி காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் பணப்பாக்கத்தைச் சேர்ந்த பிரசாந்த், அரக்கோணம் அடுத்த கும்மிடிபேட்டையைச் சேர்ந்த விஷ்ணு என்பதும், அவர்களுடன் பிரசாந்தின் நண்பன் பணப்பாக்கம் ராஜசேகர் ஆகிய 3 பேரும் சேர்ந்து தினேஷ்,கோபியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி. செல்போன், பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸார் பிரசாந்த்,விஷ்ணு இருவரை கைது செய்தனர் . மேலும் , செல்போனுடன் பதுங்கி இருக்கும் இராஜசேகரை போலீஸார் தேடி வருகின்றனர்..

Tags

Next Story
ai healthcare products