பாணாவரம் கொலைவழக்கில் தலைமறைவான இருவர் சரண்

பாணாவரம் கொலைவழக்கில் தலைமறைவான இருவர் சரண்
X
பாணாவரம் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கொலைவழக்கில் தலைமறைவான இருவர் வாலாஜா நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள ரங்காபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியர்,வரதராஜ். இவர் கடந்தமாதம் 7ந்தேதி இரவு அவரது நிலத்திலுள்ள பம்பு செட்டில் தூங்கிக் கொண்டிருந்தார் அப்போது மர்ம நபர்கள் அவரைகொலை செய்து விட்டு தப்பியோடினர்.

அக் கொலைச் சம்பவம் குறித்து பாணாவரம் போலீஸார்வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர் இந்நிலையில் இம்மாதம் 3ந்தேதி சென்னை ஆலந்தூர் ஜேம்1 நீதிமன்றத்தில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த பார்த்தீபன் (30) என்பவன் சரண்டைந்தான். அவனைப் பாணாவரம் போலீஸார் காவலில் எடுத்து கொலைக்கான காரணம் குறித்தும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் கொலையாளிகள் குறித்து பார்த்திபனிடம் போலீஸார்விசாரணை செய்தனர்.

அதில் அவன் தந்த தகவலின் பேரில் பாணாவரம் ரங்காபுரத்தைச் சேர்ந்த சின்னப்ப ரெட்டி மகன் குமார்(30)அவனது நண்பன் திருத்தணியை சேர்ந்த லட்சுமடன்(31)ஆகிய இருவர்மீது வழக்கு பதிந்து தேடி வந்த நிலையில் இருவரும் 11ந்தேதி வாலாஜா நீதி மன்றத்தில் சரணடைந்தனர். அதனையடுத்து தகவலறிந்த பாணாவரம் போலீஸார் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை செய்து பின்னர் மீண்டும் சிறையிலடைத்தனர் .

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!