இயற்கை இடுபொருள்கள் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி

இயற்கை இடுபொருள்கள் தயாரிக்க  விவசாயிகளுக்கு பயிற்சி
X
பல்லூரில் இயற்கை முறையில் இடுபொருள்களை தயாரிப்பது குறித்து வேளாண்துறையினர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டாரத்தைச் சேர்ந்த பல்லூரில் விவசாயத்திற்கு தேவைப்படும் இடு பொருள்களான பஞ்ச கவ்யம், மண் புழு உரம் ஆகியவற்றை இயற்கை முறையில் தயாரிக்கும் செயல்முறைப்பயிற்சிகள் வழங்கப்பட்டது

பயிற்சிக்கு துணை வேளாண் இயக்குனர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். பின்னர் வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜு ,வேளாண்திட்டங்கள் மற்றும் அரசு வழங்கும் மானியங்கள் குறித்து விரிவாக கூறினார.

பயிற்சிக்கு நெமிலி வட்டாரத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai healthcare products