சோளிங்கரில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு .

சோளிங்கரில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு .
X

சோளிங்கர் உழவர்சந்தை மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

சோளிங்கர் உழவர்சந்தை மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை கையாள்வதற்காக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பாணாவரம் ரோட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதேபோல,சோளிங்கர் பேரூராட்சிக்குட்பட்ட திருத்தணி ரோட்டில் உழவர்சந்தை அமைக்கவும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.

மேலும், தற்போது வேகமாக நடந்து வரும் சோளிங்கர் யோக நரசிம்மசுவாமி கோயில் ரோப் கார் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக கார் பார்க்கிங் செய்ய இடம்தேர்வு செய்யும் பணிகள் நடந்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் சோளிங்கர் பகுதிக்குச் சென்று மேற்படி திட்டங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது வட்டாட்சியர்,பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அறங்காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். பின்பு அங்கு நடந்து கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார்.

Tags

Next Story
ai business transformation