சோளிங்கரில் ஆண்டாள் நாச்சியார் எழுந்தருளல்

சோளிங்கரில் ஆண்டாள் நாச்சியார் எழுந்தருளல்
X

ஆண்டாள் நாச்சியார் வெளிப்பிரகாரம் எழுந்தருளல் நிகழ்ச்சி 

சோளிங்கர் லஷ்மி நரசிம்மர் கோயிலில் வெள்ளிக்கிழமை விசேஷமாக ஆண்டாள் நாச்சியார் வெளிப்பிரகாரம் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஊர்கோயிலான பத்தோசிதப்பெருமாள் கோயிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஆண்டாள் நாச்சியார் கோயிலின் வெளிப்பிரகார வலம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன் வழக்க நிகழ்வாக வெள்ளிக்கிழமை இன்று ஆண்டாள் நாச்சியாருக்குசிறப்பு அபிஷேகங்கள்,நடந்து விசேஷமாக அலங்காரத்தில் காட்சிதந்தார்

பின்னர், அவருக்கு கோயில் பட்டாச்சாரியர்களால்,சிறப்பு ஆராதனைகள்மற்றும் பாசுரங்கள் பாராயண நிகழ்ச்சிகள் நடந்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, ஆண்டாள்நாச்சியார் பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில்,ஏராளமானோர் கலந்து கொண்டு ஆண்டாளை வழிபட்டுச்சென்றனர்..

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்