உள்ளாட்சி தேர்தல் குறித்து சோளிங்கரில் திமுக ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் குறித்து சோளிங்கரில் திமுக ஆலோசனை கூட்டம்
X
உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக ஆலோசனை கூட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சோளிங்கர் ஒருங்கிணைந்த ஒன்றிய தி.மு.க செயல் வீரர்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம் வரவேற்றார்.

இதில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் ஊரக உள்ளாட்சிதேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.

பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நிர்வாகிகள் முகமதுஅலி, மதிவாணன், காண்டிபன், மாவட்ட நிர்வாகிகள், சோளிங்கர் கிழக்கு மேற்கு மத்திய நிர்வாகிகள்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!