நெமிலியருகே பறிமுதல் செய்யப்பட்டமணல் ஏலம்

நெமிலியருகே பறிமுதல் செய்யப்பட்டமணல் ஏலம்
X

பறிமுதல் செய்யப்பட்ட   மணல்.

நெமிலியருகே பறிமுதல் செய்யப்பட்டமணல் ஏலம் விடப்பட்டது.

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அசநெல்லிக்குப்பம் புதுப்பேட்டைத்தெரு கார்த்த்திக நகர்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு எந்த வித ரசீதும் அனுமதியும் பெறப்படாமல் சுமார் 10 யூனிட் மணல் குவிக்கப்பட்டிருந்த்து.

அதனைக்கண்டறிந்த நெமிலி வட்டாட்சியர் சுமதி மணலை பறிமுதல் செய்தார். அதேபோல், பணப்பாக்கம் அடுத்த ரெட்டிவலத்தில் குவிக்கப்பட்டிருந்த 1யூனிட் மணலையும் பறிமுதல் செய்தார்.

பின்னர்,மொத்தம் 11யூனிட் மணலையும் தக்கோலம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சேரலாதன்,ஆய்வாளர்மணி ஆகியோர் முன்னிலையில் வருவாய்துறையினர் ₹30,000க்கு ஏலம் விட்டனர.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare